தீவிர வயிற்றுப்போக்கு/ பேதி நிறுத்துவதற்கான இயற்கை நாட்டு வைத்திய முறை. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் காரணிகளும் நோயைத் தவிர்க்கும் முறையும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் சந்தர்ப்பத்தில் உங்கள் மலமானது, இளகி நீர் தன்மையாக காணப்படும்.
சாதாரணமாக ஒருவர் வருடத்தில் சில தடவைகள் இந்த அசௌகரியத்துக்கு உள்ளாகலாம். இந்த வயிற்றுப் போக்கானது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கலாம்.
இடைக்கிடையே உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுமாயின் எழுச்சியூட்டும் உடல் நோய்க்குறி எனப்படும்(irritable bowel syndrome) என்ற நோய் நிலைமை அல்லது வேறு காரணங்கள் இவ் அசௌவ்கரியமான சூழ்நிலைக்கு பக்கபலமாக அமைகின்றது.
வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகின்றது?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் வயிற்றினுள் உட்புகும் நோய்க்கிருமியே (virus) இதற்குக் காரணமாகும்.
ஏனைய காரணங்களாவன:
- மதுபாவனை
- சில உணவுகளினால் ஏற்படும் ஒவ்வாமை
- நீரிழிவு
- குடல்சார் நோய்கள்
- சமிபாட்டுத் தொகுதியை பாதிக்கும் உணவுகள்
- பக்டீரியா தொற்று (பழுதடைந்த/ நச்சு வாய்ந்த உணவு உட்கொள்வதால்)
- அதீத மலமிளக்கி பாவனை
- மாத்திரைகள்
- ஹைப்பர் தைராய்டிசம்
- கதிர்வீச்சு சிகிச்சை
- சில புற்றுநோய்கள்
- சமிபாட்டு தொகுதியில் செய்யப்படும் சத்திரசிகிச்சை
- சில வகையான ஊட்டச்சத்துக்களை அகத்துறுஞ்சுவதில் ஏற்படும் சிக்கல்
வயிற்றுப் போக்கின் அறிகுறிகள்
- வயிற்றில் வீக்கம்
- தசை பிடிப்பு
- மெல்லிய அல்லது இலகுவான மலம்
- நீர்த்தன்மையான மலம்
- உடனடியாக மலம் கழிக்க வேண்டி ஏற்படும் திடீர் உணர்வு
- குமட்டல் மற்றும் வாந்தி
தீவிர வயிற்றுப்போக்கின் அறிகுறிகள்
- இரத்தம் அல்லது சளியுடன் ஆன மலம்
- உடல் நிறை குறைதல்
- காய்ச்சல்
நீர்த் தன்மையான மலமானது ஒரு நாளில் மூன்று முறைக்கு அதிகமாக வெளியேறும்போது அதற்கேற்றாற்போல் நீராகாரங்கள் உட்கொள்ள வேண்டும் இல்லையெனில் நீரிழப்பு(dehydration) ஏற்படலாம்.
நாட்டு வைத்திய முறை-1
தேவையான பொருட்கள்:
- ஒரு டம்ளர் தண்ணீர்
- அரைவாசி எலுமிச்சம்பழம்
- 2 மேசைக்கரண்டி தேயிலைத்தூள்
செய்முறை
ஒரு டம்ளர் நீரை நன்றாகக் கொதிக்கவைத்து அதில் இரண்டு மேசைக்கரண்டி தேயிலை தூள் சேர்த்து கொதிக்க வைத்த நீரானது அரை டம்ளர் ஆகும் வரை வத்த விடவேண்டும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அதில் அரை எலுமிச்சைப் பழச்சாற்றை சேர்க்க வேண்டும் (ஆற வைத்த பின்னரே எலுமிச்சம்பழ சாற்றை சேர்க்க வேண்டும் ).
சர்க்கரை சேர்க்காமல் பருகுவது கூடிய பலனைத்தரும் பெரியவர்கள் 50 ml பருகுவது போதுமானது சிறு குழந்தைகள் 5ml - 10ml வரை பருகலாம்.
இதை அருந்திய பின்னர் ஒரு அல்லது இரண்டு மணி நேரம் பசியோடு இருப்பது சிறந்தது
நாட்டு வைத்திய முறை-2
தேவையான பொருட்கள்:
- மாதுளம் பழம்
- தேன்
செய்முறை
ஒரு மாதுளம்பழத்தை எடுத்து சிறிதளவு தண்ணீர் கலந்து ஜூஸ் செய்து கொள்ளவும் அதில் இரண்டு மேசைக்கரண்டி தேன் சேர்த்து ஒரு நாளில் 2 தடவைகள் காலை மாலை அருந்தும்போதுவயிற்றுப்போக்கு நின்று நிவாரணம் கிடைக்கும்
குறிப்பு: இது உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று போக்கிற்றுக்கானது.
நாட்டு வைத்திய முறை-3
தேவையான பொருட்கள்:
- கசகசா தூள் (கசகசா விதையை அரைத்து பெறப்பட்ட)
- பனங்கற்கண்டு
செய்முறை
அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் இரண்டு டம்ளர் நீருடன் மூன்று மேசைக்கரண்டி கசகசா துளையிட்டு அதனுடன் 3 மேசைக்கரண்டி பணக்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி மூன்று நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
இதனை காலை ஒரு தடவை மாலை ஒரு தடவை என்று மூன்று நாட்கள் அருந்தும்போது வயிற்றுப்போக்கு நிவாரணம் கிட்டும்.
குறிப்பு: நோய்க் கிருமித் தொற்றினால் ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கிற்றுக்கானது.
பின்வரும் அறிகுறிகள் காணப்படும் பொழுது உடனடியாக வைத்தியரை நாடவும்
- வயிற்றுப்போக்கின் போது கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுதல் அல்லது பாதையில் இடப்படும் தார் போன்று மலம் வெளியேறுதல்
- தீவிர காய்ச்சல்(101F க்கு மேல்) அல்லது இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மேற்பட்ட காய்ச்சல்
- இரண்டு நாட்களுக்கு மேலாக வயிற்றுப்போக்கு தொடர்ந்து காணப்படல்.
- உடலில் இருந்து வெளியேறும் நீருக்கு பகரமாக நீர் ஆகாரங்களை உட்கொள்ள முடியாத வண்ணம் குமட்டல் அல்லது வாந்தி ஏற்படுதல்
- வயிற்றில் அல்லது பின் பகுதியில் தீராத வலி
- வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு திரும்பிய பின் ஏற்படும் வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பின் போது உடனடியாக வைத்தியரை சந்திக்க வேண்டும்.நீரிழப்பின் அறிகுறிகளாவன:
- பழுப்பு நிறத்திலான(பிரவுன் கலர்) சிறுநீர்
- சிறிதளவில் சிறுநீர் வெளியேறல்
- வேகமான அதிகளவான இதயத்துடிப்பு
- தலைவலி
- வறண்ட சருமம்
- எரிச்சல்
- குழப்பமான மனநிலை
சுகாதார பழக்கவழக்கங்கள் சுத்தமான உணவுகள் என்பவற்றின் மூலம் எதிர்காலத்தில் அடிக்கடி இந்நோய்க்கு ஆளாவதில் இருந்து தப்பிக்க முடியும்.
COMMENTS