விக்கல் உருவாகும் முறை மற்றும் காரணங்கள். விக்கலை நீக்க எளிய முறைகளும் இயற்கை பாட்டி வைத்திய குறிப்புகளும்.
விக்கல் எவ்வாறு ஏற்படுகிறது?
சுவாசிக்கும்போது உட்செல்லும் காற்றினால் மார்பின் தசைகள் விரிவடைந்து அதன் கீழே காணப்படும் ஒருவகையான டயர் பிரேம்(diaphragm) உதரவிதானம் சுருங்கி விரிகிறது. இவ்வாறு விரிவடையும் சந்தர்ப்பத்தில் குரல் நான்கள் ஆகிய மூச்சை உட்கொண்டு வரும் நான்களும் விரிகின்றன. இதனால் நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைந்து காற்று பரிமாற்றமும் இலகுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் சுவாசிக்கும் காற்று தடையின்றி நுரையீரலுக்குள் நுழைகிறது.
மார்பு பகுதியில் காணப்படும் நரம்புகளில் எரிச்சலால் உதரவிதானம் மூளையின் கட்டுப்பாட்டு தாண்டி சுயமாக வேலை செய்யத் தொடங்கி சுருங்கி விரிவதால் குரல்நாண்கள் முறையாக திறக்கப்படாத போது சுவாசம் நடைபெறும்போது குரல் நாண்களின் இடைவெளி போதாத தன்மையால் காற்று இருகி விக் எனும் சத்தத்தை உண்டு பண்ணுகிறது. இதுவே விக்கல் என அழைக்கப்படுகிறது.
விக்கல் வருவதற்கான காரணங்கள்
●அதிக சூடான உணவை உட்கொள்ளுதல்
●வேகமாக உணவை உட்கொள்ளுதல்
●முறையான அளவு நீர் அருந்தாமை
●அளவுக்கு அதிகமாக உணவு உண்ணல்
●புகைப்பிடித்தல்
●மது அருந்துதல்
●இரசாயன பானங்களை அருந்துதல்
●மன அழுத்தம் மற்றும் மன சோர்வு
●சுயிங்கம்(chewing gum)சாப்பிடுதல்
விக்கல் நிற்க இயற்கை முறைகள்
விக்கல் ஏற்பட்டவுடன் உடம்பில் உள்ள கார்பன்டை ஆக்சைடு 'CO2' அளவு குறைந்துவிடுகிறது. இதனால் இதன் அளவை உடம்பில் அதிகரிப்பதன் மூலமும் விக்கலை எளிமையாக நிறுத்தலாம். விக்கலை நிறுத்தும் பல முறைகள் பின்வருமாறு
1.மூச்சை நன்றாக உள்ளிழுத்து இருபது நொடிகள் வரை வைத்திருந்து மெதுவாக வெளியே விட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக (5 முறை) செய்வதன் மூலம் விக்கல் நிற்கும்.
2.சர்க்கரை ஒரு தேக்கரண்டி நாக்கில் வைத்து தானாகக் கரைய வைத்தால் விக்கல் உடனடியாக குணமாகும்.
3.காகித பேக் (paper bag) ஒன்றின் மூலம் மூக்கையும் வாயையும் அடைத்து மூச்சை இழுத்து விடுவதன் மூலம் கார்பன்-டை-ஆக்சைடு உடலினுள் செல்வதால் விக்கல் குணமடையும்.
4.ஒரு கோப்பை குளிர்ந்த நீரை வேகமாக குடிப்பதன் மூலமும் விக்கலை நிறுத்திக்கொள்ளலாம்
5.நாக்கை வெளியே தள்ளியவாறு சில நிமிடங்கள் இருக்கும் போதும் விக்கல் தானாக குணமடையும்
6.சாதாரண விக்கலின் போது சிறிது நீர் அருந்தி ஓய்வாக இருந்தாலே அது இல்லாமல் ஆகிவிடும்.
விக்கல் குணமாக பாட்டி வைத்தியம்
விக்கல் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக காணப்படின் மருத்துவரை நாடுதல் சிறப்பானதாகும். எனினும் மருத்துவரை நாடும் முன் கீழ்காணும் பாட்டி வைத்திய முறைகளை உபயோகித்து பார்த்தல் சிறந்தது.
அனைத்து வீடுகளிலும் காணப்படும் ஒரு சமையலறை பொருள் சின்ன வெங்காயம். இந்த சின்ன வெங்காயம் ஒன்றை எடுத்து அதன் வெளி தோலை அகற்றி நன்று மென்று சாப்பிடுவதன் மூலம் விக்கல் உடனடியாக நிற்கும்.
ஒரு லிட்டர் அல்லது ஒன்றரை லிட்டர் நீரை சாதாரண அளவு சூடாக்கி, அதற்குள் ஒரு ஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த நீரை ஒரு நாளைக்கு இடைக்கிடையே சரி பல மணித்தியாலங்களுக்கு இடைக்கிடையேனும் சரி முழுமையாகக் குடிக்க வேண்டும். இது நீண்ட நாள் விக்கலை குணப்படுத்த சிறந்தது. மேற்கண்ட மருந்து பாவனையின் பின்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிய முறைகளை கையாள்வது நோயாளிக்கு மேலும் சுகமளிக்கும்.
COMMENTS